விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி 2 பேர் காயம்
விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.
விவசாயி
விளாத்திகுளம் அருகே புதூரை அடுத்த பூதலாபுரத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் (வயது 45). விவசாயி. இவர் சம்பவத்தன்று இரவில் புதூரில் இருந்து பூதலாபுரத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
விளாத்திகுளம் அருகே சின்னையாபுரத்தைச் சேர்ந்தவர்கள் முருகன், கணபதி. நண்பர்களான இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தங்களது ஊரில் இருந்து புதூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
பரிதாப சாவு
விளாத்திகுளம் அருகே எல்.வி.புரம் விலக்கு அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ராமநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காயம் அடைந்த முருகன், கணபதி ஆகிய 2 பேரையும் அருப்புக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், காடல்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ராமநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story