புதுக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து பெண் பலி


புதுக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து பெண் பலி
x
தினத்தந்தி 23 Feb 2020 3:30 AM IST (Updated: 22 Feb 2020 7:36 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார்.

தூத்துக்குடி, 

புதுக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார்.

கணவன்–மனைவி 

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை வாகைகுளம் அருகே உள்ள பொட்டலூரணி மேற்கு தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 49). டிராக்டர் டிரைவர். இவருடைய மனைவி ஆறுமுகசெல்வி (37). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

சங்கரநாராயணனுக்கு சொந்தமான தோட்டம் பொட்டலூரணியில் உள்ளது. நேற்று முன்தினம் கணவன், மனைவி 2 பேரும் தோட்டத்துக்கு செல்ல டிராக்டரில் புறப்பட்டனர். டிராக்டரை சங்கரநாராயணன் ஓட்டினார்.

விபத்தில் பலி 

பொட்டலூரணி பாலம் அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் ஆறுமுகசெல்வி பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story