ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்க வேண்டும் உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே வலியுறுத்தல்


ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்க வேண்டும்  உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Feb 2020 4:00 AM IST (Updated: 22 Feb 2020 8:01 PM IST)
t-max-icont-min-icon

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

நெல்லை, 

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே வலியுறுத்தி உள்ளார்.

மாற்றுப்பொருட்கள் 

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப்படை சார்பில் நெல்லை பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதையொட்டி அங்கு பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.

நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்’’ என்றார்.

சான்றிதழ் 

தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செல்வின் சாமுவேல் வரவேற்றார். தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய நெல்லை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரொமால்ட் டெரிக் பின்ட்டோ, சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் கணேசன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத்துறை தலைவர் உமா மகேசுவரி, நாகர்கோவில் சுற்றுச்சூழல் கல்வியாளர் டேவிட்சன், நெல்லை மண்டல நகராட்சி தூய்மை பாரத இயக்க அணித்தலைவர் பவித்ரா, தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலர் நேசமணி, தமிழ் மருத்துவ கழக நிறுவனர் மைக்கேல் ஜெயராஜ் ஆகியோர் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர்.

முடிவில் கண்காட்சி அமைத்திருந்த மாணவ–மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஜான்சன் தலைமை தாங்கினார். ஜான்ஸ் கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி சான்றிதழ் வழங்கினார். முடிவில் சேரன்மாதேவி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜோசப் நன்றி கூறினார்.

Next Story