காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் - ஊர்வலம்
காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் ஊர்வலம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்,
ஒருங்கிணைந்த அரியலூர், பெரம்பலூர் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் ஜெயங்கொண்டம் பரப்ரமம் பவுண்டேசன் இணைந்து நடத்திய காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் ஊர்வலம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. ஊர்வலத்தை ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவர் ரவிசங்கர் தொடங்கி வைத்தார்.
அன்னை தெரசா நர்சிங் கல்லூரி நிறுவனர் முத்துக் குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட நல கல்வியாளர் மனோகரன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் வேல்முருகன், முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் சீனிவாசன், தலைமை செவிலியர் ஹெலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலமானது ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தொடங்கி கும்பகோணம் சாலை, 4ரோடு வழியாக வந்து முடிவடைந்தது.
முன்னதாக அரசு மருத்துவமனையில் காசநோய் மற்றும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு கொண்டைக்கடலை, பேரிச்சம்பழம் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story