மாவட்ட செய்திகள்

பல்வேறு பெண்களுடன் காம களியாட்டம்: வங்கி அதிகாரி மீதான வழக்கு மணப்பாறை போலீசுக்கு மாற்றம் + "||" + Sex with a different woman: The case of banking officer transferred

பல்வேறு பெண்களுடன் காம களியாட்டம்: வங்கி அதிகாரி மீதான வழக்கு மணப்பாறை போலீசுக்கு மாற்றம்

பல்வேறு பெண்களுடன் காம களியாட்டம்: வங்கி அதிகாரி மீதான வழக்கு மணப்பாறை போலீசுக்கு மாற்றம்
பல்வேறு பெண்களுடன் காம களியாட்டத்தில் ஈடுபட்ட வங்கி அதிகாரி மீதான வழக்கு மணப்பாறை போலீசுக்கு நேற்று மாற்றம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்,

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார்(வயது 36). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் காசாளராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் தஞ்சை ரெட்டிப்பாளையம் சாலையில் உள்ள வகாப் நகரை சேர்ந்த தாட்சர்(32) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.


இந்த நிலையில் திருமணமான நாள் முதலே எட்வின் ஜெயக்குமார், மனைவியுடன் நெருங்கிப்பழகுவதை தவிர்த்து வந்தார். மேலும் பலமணி நேரம் அறைக்குள் செல்போனிலேயே நேரத்தை செலவழித்தார். மேலும் 50 பவுன் நகையை வரதட்சணையாக வாங்கி வருமாறு எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் துன்புறுத்தி உள்ளனர்.

ஆபாச வீடியோ

இதனால் சந்தேகம் அடைந்த தாட்சர் கணவரின் செல்போனை பார்த்தபோது அதில் ஏராளமான பெண்களின் ஆபாச படங்கள் மற்றும் அந்த பெண்களுடன் தனது கணவர் நெருக்கமாக இருந்த வீடியோ இருந்தது தெரிய வந்தது. அந்த படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த பெண்களில் சிலர் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் வங்கியில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவருடனும் எட்வின் ஜெயக்குமார் தொடர்பில் இருந்துள்ளார்.

இது தாட்சருக்கு தெரிய வந்ததும், அவருக்கு எட்வின் ஜெயக்குமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தாட்சர் தஞ்சை மாவட்டம் வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் எட்வின் ஜெயக்குமார் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

மணப்பாறை போலீசுக்கு மாற்றம்

இந்த நிலையில் சம்பவம் நடந்த இடம் திருச்சி மாவட்டம் மணப்பாறை என்பதால் இந்த வழக்கை மணப்பாறை போலீசுக்கு மாற்ற வல்லம் அனைத்து மகளிர் போலீசார் முடிவு செய்தனர். இது தொடர்பான ஆவணங்களை கூடுதல் டி.ஜி.பி.க்கு அனுப்பி வைத்தனர்.

அவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து திருச்சி மாவட்டம் மணப்பாறை போலீசுக்கு வழக்கு மாற்றம் செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. குற்றவாளியுடன் தொடர்பு வைத்ததாக புகார் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்
குற்றவாளியுடன் தொடர்பு வைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
2. நெல்லை-மயிலாடுதுறை இடையே பாசஞ்சர் ரெயில் சேவையில் மாற்றம்
நெல்லை-மயிலாடுதுறை இடையே பாசஞ்சர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3. கேரள மாணவி வேறு மருத்துவமனைக்கு மாற்றம்: டெல்லியில் 6 பேரின் உடல்நிலை கண்காணிப்பு
கொரோனா வைரஸ் தாக்கிய கேரள மாணவி வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். டெல்லியில் 6 பேரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
4. ஆழ்துளை கிணறுகள் அமைத்து சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை? போலீசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. ஈரோடு மார்க்கத்தில் இயக்கப்பட்ட 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாமக்கல், சேலம் வழியாக இயக்கம்
ஈரோடு மார்க்கத்தில் இயக்கப்பட்ட 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு தென் மாவட்ட பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.