இணையதள ஊடகங்கள் வேகமாக வளர்ந்து வந்தாலும் பாரம்பரிய ஊடகங்கள் நம்பக தன்மையுடன் செயல்படுகிறது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு
இணையதள ஊடகங்கள் வேகமாக வளர்ந்து வந்தாலும், பாரம்பரிய ஊடகங்கள் நம்பக தன்மையுடன் செயல்படுகிறது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.
பெங்களூரு,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கி அவர் ஓய்வெடுத்தார்.
இந்த நிலையில், பெங்களூருவில் ஆங்கில பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த தனியார் நிகழ்ச்சியில் நேற்று அவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சி யில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:-
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக தற்போது இணையதள ஊடகங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இதனால் பாரம்பரியமாக இருக்கும் ஊடகங்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இணையதள ஊடகங்கள் மக்களிடையே பிரபலமாகி விட்டன. வேகமானதாகவும் உள்ளன. அதன்மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் பாரம்பரியமிக்க ஊடகங்கள் தான் ஒரு செய்தியின் உண்மை தன்மையை உறுதிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. இணையதள ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக பாரம்பரியமிக்க ஊடகங்கள், வாசகர்களின் நம்பிக்கையை பெற ஆராய வேண்டியது அவசியமானதாகும்.
ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமக்களும் முழுமையான தகவல்களை தெரிந்திருக்க வேண்டும். இணையதள ஊடகங்களின் வளர்ச்சியால் ஜனநாயகம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. அதே நேரத்தில் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதை மறந்து விடக்கூடாது. அதனால் தான் நேர்மையான ஊடகங்கள் தேவையாக உள்ளன. தகவல் தொழில்நுட்பத்தின் தாக்கம் பத்திரிகை துறை உள்பட எல்லா துறையிலும் இருக்கிறது. பாரம்பரிய ஊடகங்கள் நம்பக தன்மையுடன் செயல்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story