திருச்செந்தூரில், இன்று சிவந்தி ஆதித்தனார் உருவச்சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவிக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அறிக்கை
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தூத்துக்குடி,
தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி மத்திய, மாநில சுகாதாரத்துறை இணைந்து நடத்தும் சுகாதார திருவிழா இன்று(திங்கட்கிழமை) ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆசீர்வாதபுரம் குருகால்பேரி டி.என்.டி.டி.ஏ. பள்ளியில் காலை 9 மணிக்கு நடக்கிறது. இதை கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து காலை 10 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சிவத்தையாபுரம் முத்துமாலை அம்மன் இந்து மேல்நிலைப்பள்ளியில் ரூ.18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள வகுப்பறை கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார்.
மதியம் 12 மணிக்கு திருச்செந்தூரில் அமைக்கப்பட்டு உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு சென்று, அங்கு உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவச்சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story