மாவட்ட செய்திகள்

சத்தியமங்கலம் அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைக்கு தீ வைப்பு; வாகன ஓட்டிகள் அவதி + "||" + Fire on garbage dumped near Satyamangalam; Motorists

சத்தியமங்கலம் அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைக்கு தீ வைப்பு; வாகன ஓட்டிகள் அவதி

சத்தியமங்கலம் அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைக்கு தீ வைப்பு; வாகன ஓட்டிகள் அவதி
சத்தியமங்கலம் அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
டி.என்.பாளையம், 

சத்தியமங்கலத்தில் இருந்து அத்தாணி செல்லும் ரோட்டில் எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் இரவு நேரங்களில் வாழை மட்டைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பல்வேறு குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன.

அவ்வாறு கொட்டப்படும் கழிவுகளில் பகல் நேரத்திலேயே மர்ம நபர்கள் தீ வைத்து விடுகின்றனர். இதனால் குப்பை கழிவுகள் தீப்பிடித்து எரிவதோடு புகை மண்டலமும் அந்த இடத்தில் உருவாகி விடுகிறது.

இதன்காரணமாக அந்த பகுதி வழியாக வாகனங்களில் செல்பவர்கள் எதிரே செல்லும் வாகனங்கள் தெரியாமல் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதுடன், மூச்சுத்திணறலுக்கும் உள்ளாகி அவதிப்படுகிறார்கள்.

எனவே சத்தியமங்கலம்- அத்தாணி சாைலயோரம் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சத்தியமங்கலம் பகுதியில் ஊரடங்கால் கைத்தறி நெசவு தொழில் பாதிப்பு; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சேலைகள் தேக்கம்
ஊரடங்கு காரணமாக சத்தியமங்கலம் பகுதியில் கைத்தறி நெசவு தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள் விற்க முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன.
2. சத்தியமங்கலம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு வேலா மரப்பட்டைகள் உரிப்பு
சத்தியமங்கலம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வேலாமரத்தின் பட்டைகள் உரிக்கப்பட்டு உள்ளன. போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
3. சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
4. சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
5. சத்தியமங்கலத்தில் பழமையான பவானீஸ்வரர் கோவில் மதில்சுவர் இடிந்து விழுந்தது
சத்தியமங்கலத்தில் பழமையான பவானீஸ்வரர் கோவிலில் மதில் சுவர் இடிந்து விழுந்தது.