சுவரொட்டியில் அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்


சுவரொட்டியில் அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 Feb 2020 5:00 AM IST (Updated: 23 Feb 2020 11:02 PM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சுவரொட்டியில் அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தா.பழூர்,

தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. அதில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் சிலர் அவமரியாதை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதனை நேற்று காலை பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென ஜெயங்கொண்டம்- அணைக்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி சுவரொட்டியில் அவ மரியாதை செய்த மர்ம நபர்களை போலீசார் கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனை அறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மற்றும் தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் குற்றவாளிகளை உடனே கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம்- அணைக்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. 

Next Story