மாவட்ட செய்திகள்

குற்ற செயல்களை தடுக்க நகரம்-கிராமப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் + "||" + Surveillance cameras should be installed in urban and rural areas to prevent crime

குற்ற செயல்களை தடுக்க நகரம்-கிராமப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்

குற்ற செயல்களை தடுக்க நகரம்-கிராமப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்
குற்ற செயல்களை தடுக்க நகரம்-கிராமப்புறங்களில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசினார்.
வெள்ளியணை,

கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலையத்தின் சார்பில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஏமூரில் நடைபெற்றது. இதற்கு ஏமூர் ஊராட்சி மன்றத்தலைவர் வி.சி.கே. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கரூர் போலீஸ் துணை சூப்பிரண்டுசுகுமார், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெள்ளியணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டிராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-


பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும்போது, அது குறித்த தகவல்களை அப்பகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால் அந்த வீட்டை போலீசார் கண்காணித்து திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். தங்கள் பகுதியில் குற்றச்செயல்கள் நடைபெறும்போது அது குறித்து பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் அளிப்பவர் குறித்து விவரங்கள் யாருக்கும் தெரியப்படுத்தப்படமாட்டாது.

கண்காணிப்பு கேமராக்கள்

நகரம் மற்றும் கிராமப்புறங்களில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அப்போது தான் குற்றச்செயல்களை தடுக்க முடியும். மேலும் குற்றங்கள் நடைபெற்றால் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க முடியும். இதற்கு போலீசாருடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஹெல்மெட் , சீட்பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். மதுபானம் அருந்தி மற்றும் செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்ட கூடாது. ஓட்டுனர் உரிமம், வாகனத்தின் அனைத்து அசல் ஆவணங்களையும் வாகனம் ஓட்டும்போது வைத்திருத்தல் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து காவலன் செயலி குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகர் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுவையை சேர்ந்த அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்
புதுவையில் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் நிவாரண உதவித்தொகையாக அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
2. மலைக்குறவன் சாதி சான்று வைத்துள்ளவர்களுக்கு பழங்குடிகள் நலவாரிய அட்டை சங்க கூட்டத்தில் தீர்மானம்
மலைக்குறவன் சாதி சான்று வைத்துள்ளவர்களுக்கு தமிழ்நாடு பழங்குடிகள் நலவாரிய அட்டை பெற்றுத்தந்திட வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியதால் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியதால் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா? என மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
4. 144 தடை உத்தரவால் பொருட்களை வாங்க அலைமோதிய கூட்டம்; அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி உணவு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
5. காய்கறி மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது; வத்திராயிருப்பில் கடைகளில் கூட்டம் திரண்டிருந்தது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் காய்கறி வாங்கவும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் கடைகளில் கூட்டம் அலைமோதியது.