தேசத்துரோகிகளை சுட்டுத்தள்ள வேண்டும் மந்திரி பி.சி.பட்டீல் பரபரப்பு பேட்டி


தேசத்துரோகிகளை சுட்டுத்தள்ள வேண்டும் மந்திரி பி.சி.பட்டீல் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 24 Feb 2020 3:45 AM IST (Updated: 24 Feb 2020 2:53 AM IST)
t-max-icont-min-icon

தேசத்துரோகிகளை சுட்டுத்தள்ள வேண்டும் என்று விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கூறினார்.

பெங்களூரு,

விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நமது உணவை சாப்பிட்டுவிட்டு, தேசத்துரோக கருத்துகளை கூறுகிறார்கள். இத்தகைய தேசத்துரோகிகளை கண்டதும் சுட்டுத்தள்ள வேண்டும். இதற்காக சட்டம் ஒன்றை இயற்ற வேண்டியது அவசியம். இதுகுறித்து பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுப்பார்.

மகேஷ் குமட்டள்ளி எம்.எல்.ஏ. தியாகம் செய்து பா.ஜனதாவுக்கு வந்தவர். அவருக்கு உரிய பதவி கிடைக்க வேண்டும். ராஜினாமா செய்வதாக மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறியிருப்பது, அவரது சொந்த கருத்து. மகேஷ் குமட்டள்ளிக்கு அநியாயம் ஏற்படக்கூடாது என்று முதல்-மந்திரியிடம் வலியுறுத்துவோம்.

தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு மந்திரி பதவி வழங்குவதில் சட்ட சிக்கல் உள்ளது. ஜூலை மாதம் நடைபெறும் மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, தோல்வி அடைந்தவர்களுக்கும் மந்திரி பதவி வழங்குவதாக எடியூரப்பா உறுதி அளித்துள்ளார். எங்கள் மீது சித்தராமையாவுக்கு மனதிற்குள் அன்பு உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் என்பதால் எங்களை அவர் குறை கூறுகிறார்.

எங்களை அவர் நினைவுபடுத்தி கொள்ள வேண்டும். எங்களால் தான் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தது. அரசு கார், பங்களா இல்லாமல் வேறு யாருக்கோ சொந்தமான பங்களாவில் அவர் வசித்து வந்தார். இப்போது அவருக்கு அந்த வசதிகள் அதிகாரப்பூர்வமாக கிடைத்துள்ளது. இவ்வாறு பி.சி.பட்டீல் கூறினார்.

Next Story