ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருத்தங்கல்,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு திருத்தங்கல் எஸ்.ஆர்.என். பெண்கள் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இலவச சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சிவகாசி, திருத்தங்கல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர். சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சேதுராமன், இணை செயலாளர் ரவிச்செல்வம், மாவட்ட பரதிநிதி ஏஒன் பால்பாண்டி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் செல்வம் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் அறுவை சிகிச்சை டாக்டர் மணிகண்டன், டாக்டர்கள் வெங்கடேஷ், நர்மதா, விஜய் ஆனந்த், அனில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை திருத்தங்கல் நகர அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவருமான பொன் சக்திவேல் செய்திருந்தார். முன்னதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கட்சி தொண்டர்கள் ஜெயலலிதா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர். இதில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், திருத்தங்கல் நகர அ.தி.மு.க. செயலாளர் பொன் சக்திவேல், நகர அ.தி.மு.க. மகளிரணி செயலாளர் ராதா முருகன் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story