குடியுரிமை திருத்த சட்டத்தினால் முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை - வானதி சீனிவாசன் பேட்டி
குடியுரிமை திருத்த சட்டத்தினால் எந்த ஒரு முஸ்லிம்களுக்கும் பாதிப்பில்லை என்று பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.
பல்லடம்,
பல்லடத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குடியுரிமை சட்ட திருத்தத்தினால் எந்தவொரு இந்திய முஸ்லிம்களுக்கும் பாதிப்பில்லை. இது தான் உண்மை. இது குறித்து பொதுமக்கள் முன்னிலையில் தனி மேடையில் விவாதிக்க பாரதீய ஜனதா கட்சி தயாராகவுள்ளது.
குற்றச்சாட்டு சொல்கின்ற எதிர்க்கட்சியினர் விவாதிக்க முன்வர வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி ஓரிரு எதிர்க்கட்சியினர் தேச நலனில் அக்கறையில்லாத அமைப்புகளுடன் சேர்ந்து போராட்டத்தை தூண்டி விட்டு தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள். தி.மு.க கூட்டணி கட்சியினர் நடத்திய கையெழுத்து இயக்கத்தை காட்டிலும் பல கோடி வாக்காளர்கள் வாக்களித்து தான் மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்துள்ளது.
தங்களது அரசியல் நலனுக்காக போராட்டங்களை தூண்டி விட்டு அரசியல் செய்யாமல் நாட்டு நலனுக்காக சிந்தித்து அரசியல் கட்சியினர் பாடுபட வேண் டும். அமைதி மாநிலமான தமிழகத்தை கலவர பூமியாக்க அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஊர்வலத்தில் மகளிரணி செயலாளர் மலர்கொடி தர்மராஜ், மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொது செயலாளர்கள் சீனிவாசன், காடேஸ்வரா தங்கராஜ், மாவட்ட செயலாளர் வினோத் வெங்கடேஷ், மாநில மூத்தோர் அணி நிர்வாகி பழனிசாமி, மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ரமேஷ், பல்லடம் நகர தலைவர் வடிவேல், நகர பொதுச்செயலாளர் கமலேஷ்குமார் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.பல்லடம் வடுகபாளையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று பல்லடம் கடைவீதியை அடைந்தது. பின்னர் அங்கு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டம் குறித்து விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story