கிண்டி ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 28-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்


கிண்டி ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 28-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 25 Feb 2020 3:30 AM IST (Updated: 24 Feb 2020 10:43 PM IST)
t-max-icont-min-icon

கிண்டி ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் 28-ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

சென்னை, 

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகத்தின் இயக்குனர் வே.வி‌‌ஷ்ணு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி வருகிற வெள்ளிக்கிழமை (28-ந்தேதி) கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இந்த முகாமில் 35 வயதுக்குட்பட்ட 8, 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டபடிப்பு ஆகிய கல்வி தகுதி உடைய அனைவரும்(மாற்றுத்திறனாளிகள் உள்பட) கலந்துக் கொள்ளலாம்.

15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 1,000-க்கும் மேற்பட்ட பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story