காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் கிராம சேவை மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள கிராம சேவை மையத்தை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள கருநிலம் கிராமத்தில் எம்.ஜி.என்.ஆர்.வி.இ.ஜி.எஸ். திட்டத்தில் 2014-ம் ஆண்டு ரூ.13 லட்சத்து 12 ஆயிரத்தில் கிராம சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டது.
இந்தநிலையில், கட்டிடம் கட்டப்பட்ட நாளில் இருந்து இதுநாள் வரை அந்த கிராம சேவை மையத்தில் எந்தவிதமான கூட்டங்களும் நடைபெறாமல் செயல்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வனப்பகுதியை ஒட்டி கிராம சேவை மையம் அமைந் துள்ள காரணத்தினால் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
இந்த கிராம சேவை மையத்தில் தினந்தோறும் இரவு நேரத்தில் மதுபிரியர்கள் சிலர் மது அருந்தி வருகின்றனர். அப்படி மது அருந்திய பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் சில சமூக விரோத செயல்களும் இந்த கிராம சேவை மையம் கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது. எனவே இந்த கிராம சேவை மையத்தை சுத்தம் செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
மேலும் இந்த கிராம சேவை மையத்தில் நடை பெறும் சமூகவிரோத செயல்களை தடுக்க போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story