பிறந்தநாளையொட்டி ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை


பிறந்தநாளையொட்டி ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 25 Feb 2020 4:00 AM IST (Updated: 25 Feb 2020 12:19 AM IST)
t-max-icont-min-icon

பிறந்தநாளையொட்டி ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கி, தாமரைக்குளம், அரசு சிமெண்டு ஆலை, வாலாஜாநகரம், அரியலூர் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் கட்சி கொடி ஏற்றி வைத்தார். பின்னர் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து விநாயகர் கோவில், முருகன், பெருமாள் கோவில்களில் நடந்த விழாவினை தொடங்கி வைத்தார்.

அன்னதானம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூரில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.டி.ராமச்சந்திரன், இளம்பை தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமையில், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளரும், அரியலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவருமான என்.கே.கர்ணன் முன்னிலையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆலத்தூர் ஒன்றிய துணை பெருந்தலைவர் சுசிலா முருகேசன் உள்பட சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், கட்சியின் இதர உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story