சித்த மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்


சித்த மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2020 4:15 AM IST (Updated: 25 Feb 2020 1:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஒருங்கிணைந்த மரபுவழி சித்த மருத்துவர்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஒருங்கிணைந்த மரபுவழி சித்த மருத்துவர்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பாரம்பரிய, பரம்பரை மருத்துவர்களுக்கு அரசு பதிவும், தொழில் பாதுகாப்பும் வழங்கவேண்டும், பரம்பரை மருத்துவர்களுக்காக தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயல் தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் சந்திரசேகர், செல்வகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.


Next Story