திருச்சிற்றம்பலம் எமதர்மராஜன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை
திருச்சிற்றம்பலம் எமதர்மராஜன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சிற்றம்பலம்,
தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் எமதர்மராஜன் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த உண்டியலை தூக்கி சென்றுள்ளனர். பின்னர் கோவில் அருகே உள்ள ஒரு வயலில் வைத்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி உள்ளனர். இதை தொடர்ந்து உண்டியலை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் போலீசார் உண்டியல் கிடந்த இடத்தையும், கோவிலையும் பார்வையிட்டனர். மேலும் கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story