மின் மயானத்தை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்
மின் மயானத்தை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருத்துறைப்பூண்டியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி நகராட்சியை கண்டித்தும், கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள மின் மயானத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தியும், 24-வது வார்டு சிங்களாந்தி சுடுகாட்டு சாலையை உடனடியாக அமைக்க வேண்டும், திருத்துறைப்பூண்டி நகரில் உள்ள குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும், குளங்களை தூர்வார வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பாடைக்கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ரகுராமன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாடை கட்டி ஊர்வலம்
முன்னதாக நகராட்சியை கண்டித்து வேதாரண்யம் சாலையில் இருந்து பாடைக்கட்டி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் நகர குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், கோபு, வேதரெத்தினம், தண்டபாணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலாளர் சிவசாகர், மாதர் சங்க நகர செயலாளர் கோதாவரி, கிளை செயலாளர்கள் விஸ்வநாதன், கதிரேசன், குமார், சதாசிவம், ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story