ஜெயலலிதா பிறந்தநாள் விழா; அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கிய கொண்டாட்டம்


ஜெயலலிதா பிறந்தநாள் விழா; அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கிய கொண்டாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2020 3:45 AM IST (Updated: 25 Feb 2020 3:21 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

விளாத்திகுளம், 

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி விளாத்திகுளம் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும், அதன் அருகில் வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உருவ படத்துக்கும் சின்னப்பன் எம்.எல்.ஏ. தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாவட்ட கவுன்சிலர் நடராஜன், ஒன்றிய செயலாளர் பால்ராஜ், ஜெயலலிதா பேரவை குட்லக் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரி பஜாரில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் அரசகுரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

காயல்பட்டினம் புதிய பஸ் நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு திருச்செந்தூர் யூனியன் தலைவி செல்வி வடமலை பாண்டியன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அ.தி.மு.க. நகர செயலாளர் செய்யது இப்ராகிம், துணை செயலாளர் பூந்தோட்டம் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏரல் நகர பஞ்சாயத்து அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பெருங்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு நகர செயலாளர் செல்லத்துரை தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

எட்டயபுரம் மேலவாசல், பட்டத்து விநாயகர் கோவில் முன்பு ஆகிய இடங்களில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு நகர செயலாளர் ஆழ்வார் உதயகுமார் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் மாரிமுத்து பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு நகர செயலாளர் கப்பல் ராமசாமி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட விவசாய அணி செயலாளர் மாரியப்பன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடம்பூரில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் நாகராஜா தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சாத்தான்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு ஒன்றிய செயலாளர் சவுந்திர பாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சாத்தான்குளம் மிக்கேல் மாற்றுத்திறனாளி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் அருகே முதலூரில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு பஞ்சாயத்து தலைவர் பொன் முருகேசன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Next Story