குடியுரிமை சட்டத்தை திரும்பபெறக்கோரி திருப்பூரில் 10-வது நாளாக போராட்டம்


குடியுரிமை சட்டத்தை திரும்பபெறக்கோரி திருப்பூரில் 10-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2020 11:30 PM GMT (Updated: 24 Feb 2020 9:58 PM GMT)

குடியுரிமை சட்டத்தை திரும்பபெறக்கோரி திருப்பூரில் 10-வது நாளாக போராட்டம்.

திருப்பூர்,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய மக்கள் பதிவேடு என்பது உள்பட திட்டங்களை கைவிடக்கோரி இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்திலும் பலூன் விடும் போராட்டம், முற்றுகை போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் செல்லாண்டியம்மன் படித்துறை பகுதியில் திருப்பூர் இளைஞர் கூட்டமைப்பு மற்றும் குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் சார்பாக 10-வது நாளாக நேற்று தொடர் முழக்க தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தையொட்டி அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசியல் கட்சியினர் பலரும் வந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரையாற்றி வருகிறார்கள். போராட்டத்தையொட்டி அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். 

Next Story