மாவட்ட செய்திகள்

குடியுரிமை சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் போராட்டம் வந்திருக்காது - கனிமொழி எம்.பி. பேட்டி + "||" + Citizenship Act Without support, the struggle would not have come to Tamil Nadu - Kanimozhi MP

குடியுரிமை சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் போராட்டம் வந்திருக்காது - கனிமொழி எம்.பி. பேட்டி

குடியுரிமை சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் போராட்டம் வந்திருக்காது - கனிமொழி எம்.பி. பேட்டி
குடியுரிமை திருத்த சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிக்காமல் இருந்திருந்தால், தமிழகத்தில் போராட்டம் வந்திருக்காது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மாநில தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியை விட தற்போது கடன்சுமை நிச்சயமாக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் ஆட்சியை எப்படி நடத்துவது என்பது என்ற அடிப்படை கூட தெரியாமல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வருமான அதிகரிப்புக்கு வழி தேடாமல் இல்லாத பணத்தை செலவு செய்து கொண்டே இருந்தால் கடன்சுமைதான் அதிகரிக்கும். எதிர்காலத்தை பற்றி எந்தவித தெளிவான திட்டமிடல் இல்லாமல் பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிறுபான்மையினர் நலனுக்காக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொள்ள பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். இது எல்லாம் தேவையே இல்லை. மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவை அ.தி.மு.க. ஆதரிக்காமல் இருந்திருந்தால் மசோதா நிறைவேறி இருக்காது. தமிழகத்தில் இந்த போராட்டங்கள் வந்திருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிங்கம்புணரியில் அ.தி.மு.க. சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு
சிங்கம்புணரியில் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, முக கவசம் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
2. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய 5 வெளிநாட்டு பயணிகள் வெளியேற்றம்
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய 5 வெளிநாட்டு பயணிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
3. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களின் நிலை என்ன - ஐகோர்ட்டு கேள்வி
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களின் நிலை என்ன? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
4. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அமளி-வெளிநடப்பு
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வெளி நடப்பு செய்தன..
5. குடியுரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய பள்ளிக்கூடம் மீது தேசத்துரோக வழக்கு; காங்கிரஸ் வலியுறுத்தல்
குடியுரிமை சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய பள்ளிக்கூடம் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.