சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொலை: கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் லேப்டாப், செல்போன், வங்கி கணக்கு புத்தகங்கள் போன்றவற்றை கைப்பற்றி சென்றனர்.
நெய்வேலி,
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பயங்கர வாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த காஜாமொய்தீன், ஜாபர் அலி, அப்துல் சமது ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.) சமீபத்தில் மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வழக்கு தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் நேற்று 4 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அது பற்றிய விவரம் வருமாறு:-
நெய்வேலி
நெய்வேலி டவுன்ஷிப் 7-வது வட்டம் பெரியார் சாலையில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் காஜாமொய்தீன். இவரது முதல் மனைவி இந்திரா காந்தி. இவர் என்.எல்.சி. பொதுமருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். காஜாமொய்தீன் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர் ஆவார்.
இந்த நிலையில் என்.ஐ.ஏ. துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நெய்வேலியில் உள்ள காஜாமொய்தீன் வீட்டுக்கு வந்தனர். இதை சற்றும் எதிர்பாராத இந்திராகாந்தி திகைத்து நின்றார். பின்னர் இந்திரா காந்தி, இவரது மகன் முஜாஹிதீன், அவரது மனைவி பிரியதர்ஷினி, இந்திரா காந்தியின் தாயார் யசோதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் வீடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை காலை 10 மணிக்கு முடிவடைந்தது. சோதனையில் இந்திராகாந்தி வீட்டில் இருந்த 3 செல்போன்கள், ஒரு லேப்டாப் மற்றும் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். சோதனை மற்றும் விசாரணை அனைத்தும் கேமராவில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.
3-வது மனைவி வீட்டிலும் சோதனை
இதேபோல் காட்டுமன்னார்கோவில் அடுத்த கொள்ளுமேடு கிராமம் புதுத்தெருவில் காஜாமொய்தீனின் 3-வது மனைவி பத்தா உன்னிசாவின் வீடு உள்ளது. இங்கும் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு சாகுல் ஹமீத் தலைமையில் டெல்லி சப்-இன்ஸ்பெக்டர் சுனில், சென்னையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பத்தா உன்னிசாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
காலை 11 மணிக்கு விசாரணை முடிந்து வந்த அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்த செல்போன், வங்கி கணக்கு புத்தகங்கள், காஜா மொய்தீன் தமிழில் எழுதிய கவிதைகள், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா பாலவாய் கிராமத்தில் காஜாமொய்தீன் பெயரில் உள்ள நிலத்துக்கான பத்திரம் ஆகியவற்றை கைப்பற்றினர். பத்தாஉன்னிசாவுக்கு அப்துல்லா(8), ஒசாமா(6) என்ற இரு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேல்பட்டாம்பாக்கம்
காஜா மொய்தீனின் கார் டிரைவர் ஜாபர் அலி. இவரது சொந்த ஊர் நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டம்பாக்கம் ஆகும். காஜாமொய்தீனுடன் இவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை இன்ஸ்பெக்டர் பிரான்கோ தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
காலை 6 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை 9.30 மணி வரை நடந்தது. அப்போது வீட்டில் இருந்த ஜாபர் அலியின் தாயார், தம்பி மற்றும் தங்கை ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சோதனை முடிவில் அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
பரங்கிப்பேட்டை
இதேபோல் பரங்கிப்பேட்டை மதினா நகரில் காஜாமொய்தீனின் கூட்டாளி அப்துல்சமதின் வீடு அமைந்துள்ளது. இங்கு தற்போது அவரது தாய் அபினுனிஷா, தம்பி பகது ஆகியோர் வசித்து வருகின்றனர். இவரது வீட்டுக்கு தேசிய புலனாய்வு முகமை இன்ஸ்பெக்டர் அம்னேஸ்வரி தலைமையிலான குழுவினர் நேற்று காலை 6 மணிக்கு வந்து, அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் அவர்கள், அப்துல்சமதின் தாயார், தம்பியிடம் விசாரணை நடத்தியதோடு, அங்கிருந்து சில ஆவணங்களை கைப்பற்றினர். கடலூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story