மாவட்ட செய்திகள்

புதுவை அருகே காதல் விவகாரம்: வாலிபரை கடத்தி கொன்று உடல் எரிப்பு தப்பி ஓடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + Puduvai: A gang of teenagers abducted and burned to death

புதுவை அருகே காதல் விவகாரம்: வாலிபரை கடத்தி கொன்று உடல் எரிப்பு தப்பி ஓடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

புதுவை அருகே காதல் விவகாரம்: வாலிபரை கடத்தி கொன்று உடல் எரிப்பு தப்பி ஓடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
புதுவை அருகே காதல் விவகாரத்தில் வாலிபரை கடத்திச் சென்று கொலை செய்து உடலை எரித்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோட்டக்குப்பம்,

புதுவையை அடுத்த தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் ராகவன் (வயது22). கொத்தனார். ராகவன் நேற்று மாலை கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பகுதியில் அவருடைய நண்பர்களான புதுவை முத்தியால்பேட்டை சிவனேசன் (23), சாமிபிள்ளைதோட்டம் சஞ்சய் (22) ஆகியோருடன் நின்று கொண்டிருந்தார்.


அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் சிவனேசன், சஞ்சய் ஆகியோரை தாக்கிவிட்டு ராகவனை கடத்திச் சென்றனர்.

தீவைத்து எரிப்பு

பின்னர் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத கோட்டக்குப்பம் அய்யனார்கோவில் பின்புறம் வைத்து ராகவனை அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தனர். அதன்பிறகும் ஆத்திரம் தீராத கொலையாளிகள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

ராகவனை கடத்தியது குறித்து அவருடன் இருந்த சிவனேசன், சஞ்சய் ஆகியோர் கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை பார்வையிட்டனர்.

தனிப்படை

அப்போது ராகவன் உடல் எரிந்தும் எரியாமலும் கிடந்தது. உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராகவன் கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

காதல் விவகாரமா?

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராகவன் அவர் வசித்து வந்த அதே பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஐதராபாத்துக்கு ராகவன் சென்றார்.

இந்த நிலையில் காதல் விவகாரம் தெரிந்து பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த பெண் கடந்த 21-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த ராகவன் ஐதராபாத்தில் இருந்து நேற்று காலை கோட்டக்குப்பம் வந்துள்ளார்.

இந்தநிலையில் அவரை மர்ம கும்பல் கடத்திச் சென்று கொலை செய்துள்ளது. எனவே காதல் விவகாரத்தில் கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் பிடிபட்டால் தான் ராகவன் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும். எனவே தலைமறைவான அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பட்டுக்கோட்டையில், முன்விரோதத்தில் மினிலாரி டிரைவர் கட்டையால் அடித்துக்கொலை 6 பேருக்கு வலைவீச்சு
பட்டுக்கோட்டையில் முன்விரோதத்தில், மினி லாரி டிரைவரை கட்டையால் அடித்து கொன்ற 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. சேலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
சேலத்தில் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
3. போலி திருமண சான்று தயாரித்து பெண் என்ஜினீயருக்கு காதல் தொல்லை நெல்லை வாலிபருக்கு வலைவீச்சு
போலி திருமண சான்று தயாரித்து பெண் என்ஜினீயருக்கு காதல் தொல்லை கொடுத்த நெல்லை வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
4. கலப்பு திருமணம் செய்த இளம்பெண் மேட்டூர் போலீஸ் நிலையத்தில் ஆஜர் அரசியல் கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு
கலப்பு திருமணம் செய்த இளம்பெண் மேட்டூர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்கு அரசியல் கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5. சேலத்தில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சேலத்தில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.