விக்கிரமசிங்கபுரம் அருகே குளத்தில் மூழ்கி நாட்டு வைத்தியர் சாவு
விக்கிரமசிங்கபுரம் அருகே குளத்தில் மூழ்கி நாட்டு வைத்தியர் பரிதாபமாக இறந்தார்.
விக்கிரமசிங்கபுரம்,
விக்கிரமசிங்கபுரம் அருகே குளத்தில் மூழ்கி நாட்டு வைத்தியர் பரிதாபமாக இறந்தார்.
நாட்டு வைத்தியர்
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆறுமுகம்பட்டி பழைய ரேஷன் கடை தெருவை சேர்ந்தவர் தங்கையா. இவர் விருப்ப ஓய்வு பெற்ற மில் தொழிலாளி ஆவார். தற்போது இவர் கை, கால், எலும்பு முறிவு, வர்மம் பிடி தடவும் வைத்தியராக தொழில் செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் ஆறுமுகம்பட்டியில் உள்ள குளத்துக்கு குளிக்க சென்றுள்ளார். பின்னர் இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். அப்போது குளத்து படித்துறையில் தங்கையா கொண்டு வந்த கைலி, துண்டு, சட்டை இருந்துள்ளது. எனவே அவர் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என நினைத்து அம்பை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
குளத்தில் மூழ்கி சாவு
அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் நேற்று காலை குளத்தில் தங்கையா பிணமாக மிதந்தார். தீயணைப்பு படை வீரர்கள் வந்து தங்கையா உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.
அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீசாரும் வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன தங்கையாவுக்கு ராதா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். போலீசாரின் விசாரணையில், குளத்தில் மூழ்கி தங்கையா இறந்தது தெரியவந்தது.
Related Tags :
Next Story