ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
திருப்பத்தூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்,
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை மாநில பெண்கள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவித்தது. இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோட்டில் இருந்து தூய நெஞ்சக் கல்லூரி வரை பெண் காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சாலை பாதுகாப்பு குறித்தும், ஹெல்மெட் அணிவது குறித்தும் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story