போரூரில் அரசு பள்ளியை தத்தெடுத்து சீரமைத்த போலீசார்


போரூரில்   அரசு பள்ளியை தத்தெடுத்து சீரமைத்த போலீசார்
x
தினத்தந்தி 26 Feb 2020 3:30 AM IST (Updated: 25 Feb 2020 10:46 PM IST)
t-max-icont-min-icon

போரூரில் அரசு பள்ளியை பல்வேறு வசதிகளுடன் தனியார் பள்ளியை போன்று மாற்றி சீரமைத்தனர்.

பூந்தமல்லி, 

சென்னை போரூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள்  பயன்படுத்த முடியாத வகையில் மேஜை, நாற்காலிகள் உடைந்தும், கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலையிலும் காணப்பட்டது. இதனை சீரமைத்து தரவேண்டும் என அந்த பள்ளி ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டு வந்தனர். இதை அறிந்த போரூர் போலீசார், அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்தனர்.

பின்னர் தன்னார்வலர்கள் உதவியோடு பள்ளியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி சிதிலமடைந்து இருந்த அந்த பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைத்து வர்ணம் தீட்டினர், புதிதாக மின் விளக்குகள் அமைத்ததுடன், 13 வகுப்பறைகளுக்கு வட்டவடிவ மேஜைகள், நூறு நாற்காலிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் என பல்வேறு வசதிகளுடன் தனியார் பள்ளியை போன்று அரசு பள்ளியை மாற்றி அமைத்தனர்.

புதுப்பிக்கப்பட்ட பள்ளியை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூடுதல் கமிஷனர் தினகரன் கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளியை ஆசிரியர்களிடம் ஒப்படைத்தார். இதில் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சிதிலமடைந்த நிலையில் கிடந்த பள்ளியை சீரமைத்து கொடுத்த போலீசாருக்கு பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் நன்றி தெரிவித்தனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது.

Next Story