மாவட்ட செய்திகள்

தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல் + "||" + 3 murder cases including 2 couples: 2 arrested

தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்

தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்
திருச்சி அருகே தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிக்கியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி,

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பெரகம்பி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). விவசாயி. இவருடைய மனைவி லதா (38). இவர்கள் இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந் தேதி வீட்டு முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது ரமேஷின் வீட்டில் திருடும் நோக்கில் வந்த மர்மநபர்கள் 2 பேர் பயங்கர ஆயுதத்தால் ரமேஷ் மற்றும் அவரது மனைவி லதாவை தாக்கி கொலை செய்தனர். ரமேஷின் வீட்டில் இருந்த 7 பவுன் நகை, ரூ.3 ஆயிரம், ஒரு புதிய மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடிவிட்டு தப்பிச்சென்றனர்.


இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பாக இருந்தது. கொலையாளிகள் யார்? என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.

2 பேர் கைது

இந்த நிலையில் தம்பதி கொலை வழக்கில் கொலையாளிகளான பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை தெற்கு தெருவை சேர்ந்த கிஷாந்த் (21), அவரது நண்பர் மண்ணச்சநல்லூர் அருகே வாலையூரை சேர்ந்த கண்ணனின் மகன் பழனிச்சாமி (21) ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில் கொலையாளிகள் சிக்கியது எப்படி என்பது குறித்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்

கைதான 2 பேரும் நண்பர்கள் ஆவார்கள். 2 பேரும் மோட்டார் சைக்கிள் திருட்டில் அவ்வப்போது ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தன்றும் ரமேஷின் மோட்டார் சைக்கிளை திருடும் நோக்கில் தான் வந்துள்ளனர். ஆதாயத்திற்காக 2 பேரையும் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். அவர்கள் திருடிச்சென்ற ரமேஷின் மோட்டார் சைக்கிள் கடலூரில் ஒரு விபத்து வழக்கில் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படையினர் கடலூர் விரைந்து சென்று அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர்கள் விவரம் மற்றும் விபத்து தொடர்பாக கேட்டறிந்தனர். இதில் மோட்டார் சைக்கிளை கிஷாந்த், அவரது நண்பர் மணிகண்டன் ஆகியோர் ஓட்டிச்சென்ற போது விபத்துக்குள்ளானது தெரிந்தது. கிஷாந்த்தை பிடித்து விசாரணை நடத்திய போது உண்மை தெரியவந்தது. அவரும், பழனிச்சாமியும் சேர்ந்து ரமேஷ்-லதா தம்பதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

வாகன பதிவெண் மாற்றம்

திருடிய மோட்டார் சைக்கிளில் வாகன பதிவெண்ணை போலீசார் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக தமிழில் மாற்றி பயன்படுத்தி வந்துள்ளனர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஆதாய கொலையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் பழனிச்சாமி தனது சொந்த தம்பி பெருமாளை (18) தேவிமங்கலம் அருகே வனப்பகுதியில் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். இந்த கொலையிலும் கிஷாந்த் தனது நண்பருக்கு உதவியாக இருந்துள்ளார். பழனிச்சாமிக்கும், அவரது தம்பி பெருமாளுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனால் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காணலாம் என சென்னையில் வேலை பார்த்த பெருமாளை வரவழைத்து வனப்பகுதிக்கு அழைத்து சென்று இருவரும் கொலை செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 144 தடை உத்தரவு மீறல்; 42,035 பேர் மீது வழக்கு
தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறிய 42,035 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2. ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்கு
ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
3. தனிமை அறிவுரையை மீறிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது வழக்கு; தேனிலவுக்கு வெளிநாடு சென்று திரும்பியவர்
தேனிலவுக்கு வெளிநாடு சென்று திரும்பிய இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி, வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார். அதனை மீறியதால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
4. தமிழகத்தில் தடை உத்தரவை மீறிய 4,100 பேர் மீது வழக்கு
தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை மீறியதாக கூறி, 4 ஆயிரத்து 100 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5. ஆண்டிப்பட்டி அருகே எருக்கம்பால் கொடுத்து பெண் சிசு கொலை தாய்-பாட்டி கைது
ஆண்டிப்பட்டி அருகே எருக்கம்பால் கொடுத்து பெண் சிசுவை கொலை செய்ததாக தாய், பாட்டி கைது செய்யப்பட்டனர்.