காஞ்சீபுரம், நலத்திட்ட உதவிகள்


காஞ்சீபுரம், நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 25 Feb 2020 10:15 PM GMT (Updated: 25 Feb 2020 8:55 PM GMT)

உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் பயனாளிகளுக்கு தையல் எந்திரம், சைக்கிள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

உத்திரமேரூர்,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் பயனாளிகளுக்கு தையல் எந்திரம், சைக்கிள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கே.ஆர்.தர்மன், தங்க பஞ்சாட்சரம், பிரகாஷ் பாபு, மாவட்ட அவைத்தலைவர் குணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதை தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையடுத்து மேனலூர் கிராமத்தில் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதையை செலுத்தியதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உத்திரமேரூரை அடுத்த காரணிமண்டபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுககு இனிப்புகள் வழங்கியதுடன், பயனாளிகளுக்கு சைக்கிள் மற்றும் தையல் எந்திரம் வழங்கப்பட்டது.

இதில் எ.பி.சத்திரம் பெருமாள் மற்றும் மேனலூர் பெருமாள் தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்தநிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், மைதிலி திருநாவுக்கரசு, கூட்டுறவு கடன்சங்க தலைவர் எம்.கே.பி.வேலு, மாவட்ட இளைஞரணி பொருளாளர் ஜெயவிஷ்ணு, கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் குமார், முன்னாள் வார்டு உறுப்பினர் ஜெய், நகர இளைஞரணி பொருளாளர் துரைபாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story