குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2020 11:30 PM GMT (Updated: 25 Feb 2020 9:35 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மதுக்கூரில் இஸ்லாமியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுக்கூர்,

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 10-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் அதிராம்பட்டினத்தில் இஸ்லாமிய பெண்கள் கையில் துடைப்பத்தை ஏந்தி குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கோ‌‌ஷம் எழுப்பினர்.

கையில் கட்டு போட்டு...

அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று 6-வது நாளாக இஸ்லாமியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிறுவர்கள் டெல்லி வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சிறுவர்கள் தலை, கையில் கட்டு போட்டபடி கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை

இதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் உள்ள அக்தர் மகல்லா ஜமாத் பள்ளிவாசல் முன்பு நேற்று இஸ்லாமியர்கள் 11-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். 

Next Story