குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் காங்கிரஸ் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் குற்றச்சாட்டு
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மக்களிடையே காங்கிரஸ் குழப்பத்தை ஏற்படுத்துவதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் குற்றம்சாட்டினார்.
பெங்களூரு,
துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நேற்று ராய்ச்சூரில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மக்களிடையே குழப்பம்
நமது நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) அமல்படுத்துவது என்பது புதிய விஷயம் இல்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நேரு முதல் மன்மோகன்சிங் வரை அனைவரது ஆட்சி காலத்திலும் இந்த சட்டம் குறித்து பேசப்பட்டது. ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சியினரே இந்த விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவது சரியல்ல.
இந்த சட்டம் குறித்து மக்களிடையே ஒரு பயமான சூழலை காங்கிரசார் உருவாக்கியுள்ளனர். நமது சகோதரர்கள்போல் வாழ்ந்து வரும் இஸ்லாமிய மக்களை நாட்டை விட்டு வெளியேற்ற முடியுமா?. எக்காரணம் கொண்டும் நமது நாட்டில் அத்தகைய நிகழ்வு நடைபெறாது. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் இதுபற்றி பேசி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
புதிய பல்கலைக்கழகம்
ராய்ச்சூரில் புதிதாக பல்கலைக்கழகம் தொடங்க ஏற்கனவே அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி விரைவில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும். இங்கு ஏற்கனவே 250 ஏக்கரில் கல்லூரி வளாகம் அமைந்துள்ளது. அதனால் பல்கலைக்கழகம் தொடங்குவதில் பிரச்சினை இருக்காது. இத்தகைய நல்ல திட்டங்களுக்கு முதல்-மந்திரியின் ஆதரவு எப்போதும் இருக்கும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
Related Tags :
Next Story