இன்று புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பட்டம் வழங்குகிறார்


இன்று புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பட்டம் வழங்குகிறார்
x
தினத்தந்தி 26 Feb 2020 12:27 AM GMT (Updated: 26 Feb 2020 12:27 AM GMT)

புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடக் கிறது. மாணவ, மாணவிகளுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பட்டங்களை வழங்குகிறார்.

புதுச்சேரி,

புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

இதற்காக விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் சென்னையில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணியளவில் புதுவை விமான நிலையத்துக்கு வருகிறார். அவரை கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள், அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

தொடர்ந்து அவருக்கு போலீஸ் மரியாதை வழங்கப்படுகிறது. அதன்பின் கார் மூலம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புதுவை பல்கலைக்கழகத்தை வந்தடைகிறார். காலை 10.30 மணிமுதல் 11.30 மணிவரை பட்ட மளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். மாணவ, மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கி உரையாற்றுகிறார்.

வரவேற்பு ஏற்பாடுகள்

விழா முடிந்ததும் மீண்டும் கார் மூலம் புதுவை விமான நிலையம் திரும்புகிறார். பகல் 11.45 மணி அளவில் ஹெலிகாப்டரில் சென்னை செல்கிறார்.

புதுவைக்கு வரும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை வரவேற்கும் விதமாக அரசு சார்பில் அவர் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் ஆங்காங்கே வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

வழியெங்கும் தடுப்பு கட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவர் வந்து செல்லும்போது போக்குவரத்தை மாற்றியமைக்கவும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி பல்கலைக் கழக வளாகத்தில் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story