திருமண ஆசை வார்த்தைக்கூறி சிறுமி பாலியல் பலாத்காரம் - வடமாநில வாலிபருக்கு வலைவீச்சு
திருமண ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
துடியலூர்,
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிபிக்தாஸ் (வயது 20). இவர் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும், அதே மில்லில் வேலை பார்க்கும் பெண் ஒருவரின் மகளான 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதில் இவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பிபிக்தாஸ் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் ஆனாதாக தெரிகிறது. ஆனால் அந்த சிறுமி இதுகுறித்து வீட்டில் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் இருந்த அந்த சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி 9 மாத கர்ப்பிணியாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவர்கள் இதுபற்றி தனது மகளிடம் விசாரித்தனர். அப்போது பிபிக்தாஸ்தான் தன்னை கர்ப்பமாக்கியதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கர்ப்பமாக்கியதாக வடமாநில வாலிபரான பிபிக்தாசை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story