நன்னிலம் அருகே சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது


நன்னிலம் அருகே சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2020 4:30 AM IST (Updated: 27 Feb 2020 12:40 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நன்னிலம்,

திருவாரூர் அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரோசினி (வயது 42). இவர் கடந்த மாதம் மோட்டார் சைக்கிளில் பேரளம் சென்று விட்டு காக்காகோட்டூர் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரோசினி கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற ஆசாமிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்த பிரையரசன்(வயது 22), கும்பகோணத்தை சேர்ந்த அருண்குமார்(20) ஆகியோர் ரோசினியிடம் இருந்து சங்கிலியை பறித்து சென்றதும் அவர்கள் தற்போது ஒரு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பதும் தெரியவந்தது.

கைது

இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்த 2 பேரையும் போலீசார் விசாரணைக்காக நன்னிலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ரோசினியிடம் சங்கிலியை பறித்து சென்றதை ஒப்பு கொண்டனர். அவர்களிடம் இருந்து சங்கிலியை பறிமுதல் செய்த போலீசார் பிறையரசன், அருண்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story