மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை உடைப்புகள் சீரமைக்கப்பட்டு வருகிறது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்
மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை உடைப்புகள் சீரமைக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
குத்தாலம்,
மயிலாடுதுறையில், அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மற்றும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு நகர செயலாளரும், மாயூரம் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான வி.ஜி.கே.செந்தில் நாதன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆத்தூர் செல்வராஜ், முன்னாள் நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் நாஞ்சில் கார்த்திக் வரவேற்றார்.
புதிய பஸ் நிலையம்
இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு 5 ஆயிரம் பெண்களுக்கு சேலைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலையம் அமைக்க அரசு அனுமதி வழங்கி டெண்டர் விடும் நிலையில் உள்ளது. அதேபோல் புறவழிச்சாலை அமைக்கும் பணியில் விரைவில் தொடங்கப்படும். மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை உடைப்புகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை பகுதிக்கு புதிய திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பார் என்றார்.
கூட்டத்தில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் செல்லையன், அ.தி.மு.க. பேச்சாளர் முத்து, ஒன்றியக்குழு துணை தலைவர் மகேஸ்வரி முருகவேல், நகர நிர்வாகிகள் புவனேஸ்வரி சரவணன், உமாசந்திரன், விஜயாள்பாபுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர அவை தலைவர் அலி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story