13-வது நாளாக தொடரும் வண்ணாரப்பேட்டை போராட்டம்: இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய முஸ்லிம்கள் ‘குடியுரிமை சட்டம் வேண்டாம்’ என தாம்பூலம் பையில் வாசகம்
சென்னை வண்ணாரப்பேட்டையில் 13-வது நாளாக நேற்று முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினார்கள். அதில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது வழங்கப்பட்ட தாம்பூலம் பையில் struggle to continue, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வாசகம் இருந்தது.
சென்னை,
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக் கும் இடையே மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து ‘சென்னை ஷாகீன் பாக்’ என்ற பெயரில் கடந்த 14-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பெண்கள், சிறுவர்கள் என முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கோஷங்களை எழுப்புகின்றனர்.
வளைகாப்பு நிகழ்ச்சி
போராட்டத்தின் 4-வது நாளில் முஸ்லிம் முறைப்படி ஒரு ஜோடிக்கு திருமணம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 13-வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில், பாக்கியலட்சுமி என்ற பவித்ரா என்பவருக்கு இந்து முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. போராட்ட மேடையில் பாக்கியலட்சுமி அமர்ந்து இருக்க, முஸ்லிம் பெண்கள் அவருக்கு வளையல் அணிவித்து, அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.
வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பெண் குடும்பத்தினர் சார்பில் தாம்பூலம் பை வழங்கப்பட்டது. அதில் ‘முஸ்லிம்கள் அனைவரும் எங்கள் தொப்புள் கொடி உறவுகள் என்றும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு வேண்டாம்’ என்றும் வாசகங் கள் இடம்பெற்று இருந்தன.
Related Tags :
Next Story