குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அதிராம்பட்டினத்தில், காத்திருப்பு போராட்டம் 8-வது நாளாக நடந்தது


குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அதிராம்பட்டினத்தில், காத்திருப்பு போராட்டம் 8-வது நாளாக நடந்தது
x
தினத்தந்தி 26 Feb 2020 11:15 PM GMT (Updated: 26 Feb 2020 8:03 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அதிராம்பட்டினத்தில் நேற்று 8-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.

அதிராம்பட்டினம்,

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் இஸ்லாமியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 8-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நீடித்தது. இதையொட்டி பேரணி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு குடியுரிமை திருத்தம் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கண்டித்து கோ‌‌ஷம் எழுப்பினர்.

அப்போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதேபோல் மதுக்கூரில் இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 11-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. பட்டுக்கோட்டை வடசேரி ரோடு பெரிய பள்ளிவாசல் அருகே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நேற்று 2-வது நாளாக இஸ்லாமிய அமைப்பினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்பு துணி கட்டி...

அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளியில் நேற்று இஸ்லாமியர்கள் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள், குழந்தைகள் கண்களில் கருப்பு துணி கட்டியபடி கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோ‌‌ஷம் எழுப்பினர்.


Next Story