காக்களூர் தொழிற்பேட்டையில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.2 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
திருவள்ளூர் அருகே தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டையில் நியூரான் கெமிக்கல்ஸ் என்ற தனியார் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மின்கசிவு காரணமா?
இதையறிந்து திருவள்ளூர் மற்றும் திருவூரில் இருந்து வந்த 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதன் காரணமாக காக்களூர், திருவள்ளூர் பகுதிகளில் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story