செங்கல்பட்டு மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டார்


செங்கல்பட்டு மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல்   கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டார்
x
தினத்தந்தி 27 Feb 2020 4:06 AM IST (Updated: 27 Feb 2020 4:06 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டார். இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் வருகிற 2-ந்தேதி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

தாம்பரம், 

உள்ளாட்சி தேர்தலையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களின் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியலை தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்டார். வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை நகராட்சி கமிஷனர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் கூறியதாவது:-

2-ந்தேதி கருத்துகேட்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துகளை பெறும் வகையில் வருகிற 2-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கத்தில் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தாம்பரம் கோட்டாட்சியர் ராஜ்குமார், தாம்பரம் நகராட்சி கமிஷனர் கருப்பையாராஜா, உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) ராமகிருஷ்ணன், பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story