காஞ்சீபுரம் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதனை காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் ஸ்ரீதர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
1,578 வாக்குச்சாவடிகள்
காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் 1,236 வாக்குச்சாவடிகளும், காஞ்சீபுரம் நகராட்சியில் 198 வாக்குச்சாவடிகளும், 5 பேரூராட்சிகளில் 144 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,578 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்காக கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் வார்டு வாரியாக அமைக்கப்பட இருக்கும் வாக்குச்சாவடிகளில் வரைவு பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
வருகிற 2-ந்தேதிக்குள்
இந்த பட்டியலின் மீது ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வருகிற 2-ந் தேதிக்குள் அதன் விவரத்தினை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), நகராட்சி ஆணையர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), வட்டார வளர்ச்சி அலுவலர் ( தேர்தல்), காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story