மாவட்ட செய்திகள்

கிருமாம்பாக்கத்தில் ரூ.65 லட்சத்தில் சிறுவர் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி அமைச்சர் ஆய்வு + "||" + Minister for Work on the construction of a children's playground at Krumpampakkam at Rs

கிருமாம்பாக்கத்தில் ரூ.65 லட்சத்தில் சிறுவர் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி அமைச்சர் ஆய்வு

கிருமாம்பாக்கத்தில் ரூ.65 லட்சத்தில் சிறுவர் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி அமைச்சர் ஆய்வு
கிருமாம்பாக்கத்தில் ரூ.65 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சிறுவர் விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கந்தசாமி ஆய்வு செய்தார்.
பாகூர்,

புதுச்சேரி ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகம் சார்பில் கிருமாம்பாக்கம் மந்தைவெளி பகுதியில் குழந்தைகள், இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில் சுமார் ரூ.65 லட்சம் செலவில் நவீன விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டு உள்ளது.


இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்கான ஊஞ்சல், சறுக்கு போன்ற பல விளையாட்டு அம்சங்கள், இளைஞர்களுக்கு திறந்தவெளி உடற் பயிற்சி கூடம், முதியவர்களுக்கு நடைபயிற்சி தளம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விளையாட்டு திடலுக்கு பொது மக்களிடையே வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் பணிகள் நிறைவடைந்தும் இன்னும் திறக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அமைச்சர் கந்தசாமி ஆய்வு

இந்த நிலையில் நேற்று மாலை அமைச்சர் கந்தசாமி கிருமாம்பாக்கம் விளையாட்டு திடலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு கூடுதல் வசதிகள் செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். விளையாட்டு திடலை இன்னும் 10 நாட்களில் திறக்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் அம்பேத்கர் நுழைவு வாயில் கட்டும் பணியை பார்வையிட்டார். பின்னர் அப்பகுதியில் உள்ள சாவடி குளத்தை தூர்வார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதிகாரிகள்

இந்த ஆய்வில் ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் ஆலிஸ்வாஸ், இயக்குனர் ரகுநாதன், ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக செயற்பொறியாளர் தாரா சுப்பாராஜ், உதவி பொறியாளர் சாம்பசிவம், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன் மற்றும் பொதுப்பணித்துறை, வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வெளிநாடு- மற்ற மாநிலங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று கலெக்டர் அன்பழகன் கூறினார்.
2. கிருஷ்ணகிரியில் மருந்து கடைகளில் முக கவசம், கிருமி நாசினி பதுக்கலா? குடிமைப்பொருட்கள் போலீசார் சோதனை
கிருஷ்ணகிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்கள் பதுக்கப்படுகிறதா? என்பது குறித்து நேற்று குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை மேற் கொண்டனர்.
3. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: பொது இடத்தில் கூட்டமாக நிற்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் கலெக்டர் அறிவுரை
சின்னாளப்பட்டி, அம்மையநாயக்கனூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட கலெக்டர் விஜயலட்சுமி, பொது இடத்தில் கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
4. தேனி பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் 120 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு கலெக்டர் ஆய்வு
தேனி பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் 120 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவை கலெக்டர் பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5. நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் பிரிவில் கலெக்டர் ஆய்வு
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நபர்களை தனிமைப்படுத்தி வைக்க ஏற்படுத்தப்பட்டு உள்ள பிரிவை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.