அம்மா திட்ட முகாம்; இன்று நடக்கிறது
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தாலுகாவில் களரம்பட்டி, வேப்பந்தட்டை தாலுகாவில் பசும்பலூர் (தெற்கு), குன்னம் தாலுகாவில் எழுமூர் (மேற்கு), ஆலத்தூர் தாலுகாவில் அயினாபுரம் ஆகிய கிராமங்களில் இன்று (வெள்ளிக் கிழமை) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது.
பெரம்பலூர்,
அம்மா திட்ட முகாம்களில் வருவாய்த்துறையின் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, பயன்பெறலாம்.
இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story