மக்கள் குறை கேட்பு முகாம்


மக்கள் குறை கேட்பு முகாம்
x
தினத்தந்தி 28 Feb 2020 3:00 AM IST (Updated: 27 Feb 2020 9:53 PM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே உள்ள அனந்தபுரம் கிராமத்தில் மக்கள் குறை கேட்பு முகாம் நேற்று நடந்தது.

கண்ணமங்கலம், 

மக்கள் குறை கேட்பு முகாமிற்கு போளூர் தாசில்தார் ஜெயவேலு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதிஅண்ணாமலை, ஒன்றிய கவுன்சிலர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் கணபதி வரவேற்றார்.

முகாமில் பொதுமக்களிடம் இருந்து 73 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பரிசீலனை செய்து வருகிற மார்ச் 11-ந் தேதி ஆரணி உதவி கலெக்டர் மைதிலி தலைமையில் நடைபெற உள்ள மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

Next Story