திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா   நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 28 Feb 2020 3:45 AM IST (Updated: 27 Feb 2020 11:08 PM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ விழா நாளை (சனிக்கிழமை) இரவு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவம் நடைபெறும்.

மாசி பிரம்மோற்சவ நாட்களில் உற்சவர் சந்திரசேகரர் சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, யானை, புஷ்ப பல்லாக்கு, குதிரை, இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதி உலா வருவார்.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்வான சந்திரசேகரர் திருத்தேரோட்டம் மார்ச் மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. 8-ந் தேதி காலை திருக்கல்யாணம், அன்று மதியம் 63 நாயன்மார்கள் உற்சவம், இரவு மகிழடி சேவை போன்றவை நடைபெறும்.

விழாவில் 10-ந்தேதி இரவு தியாகராஜ சுவாமி பந்தம்பறி உற்சவம் 18 திருநடனத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையாளர் சித்ராதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story