கடலூரில், வாந்தி எடுத்த 4 மாத குழந்தை பரிதாப சாவு
கடலூரில் வாந்தி எடுத்த 4 மாத பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
கடலூர்,
கடலூர் பாதிரிக்குப்பம் சுதாகர் நகரை சேர்ந்தவர் தினகரன்(வயது 39). இவர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது 4 மாத பெண் குழந்தை மோசிதா. இந்த குழந்தை நேற்று அதிகாலை தாயின் அருகில் தூங்கிக்கொண்டிருந்தது. அப்போது குழந்தை மோசிதாவிற்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், குழந்தை மோசிதாவை பரிசோதித்து, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் கதறி அழுதனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை வாந்தி எடுத்தபோது மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு மூச்சு திணறி இறந்து இருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story