திட்டக்குடியில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


திட்டக்குடியில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2020 3:15 AM IST (Updated: 28 Feb 2020 12:59 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி,

வெலிங்டன் நீர்த்தேக்க பாசன பகுதி சிறு, குறு விவசாயிகள் சங்கத்தினர் திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க தலைவர் தயா.பேரின்பன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் பழனிசாமி, பாலமுருகன், பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால் சேதமடைந்த பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், காவிரி நீரை வெலிங்டன் நீர்த்தேக்கத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் இயங்கும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

இதில் கிளை நிர்வாகிகள் குருசாமி, கலியன், வீரராஜன், பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து, தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தில்வேலனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.


Next Story