மதுரையில் காதல் ஜோடி விஷம் குடித்தனர்: என்ஜினீயரிங் மாணவி சாவு- காதலனுக்கு தீவிர சிகிச்சை


மதுரையில் காதல் ஜோடி விஷம் குடித்தனர்: என்ஜினீயரிங் மாணவி சாவு- காதலனுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 28 Feb 2020 3:30 AM IST (Updated: 28 Feb 2020 1:30 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் குடித்தனர். இதில் என்ஜினீயரிங் மாணவி பலியானார்.

சோழவந்தான்,

மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த நவீன் குமாரும், அதே பகுதியை சேர்ந்த நிவேதா என்ற இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

நிவேதா மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

நவீன்குமார் கேட்டரிங் கல்லூரி படிப்பை முடித்து வேலை தேடி வருகிறார். காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் வாடிப்பட்டி அருகே மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கட்டக்குளம் பகுதியில் விஷம் குடித்த நிலையில் காதலர்கள் இருவரும் மயங்கிக் கிடந்தனர். அப்பகுதி பொதுமக்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் நிவேதா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

நவீன்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story