பிறந்தநாளையொட்டி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு பிரதமர் மோடி - தலைவர்கள் வாழ்த்து


பிறந்தநாளையொட்டி   முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு பிரதமர் மோடி - தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 28 Feb 2020 4:45 AM IST (Updated: 28 Feb 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

பிறந்தநாளையொட்டி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பெங்களூரு, 

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தனது 78-வது வயதில் அடி எடுத்து வைத்தார். இதையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள், கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, எடியூரப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித் தார். அவர் தனது வாழ்த்து செய்தியில், “எடியூரப்பா நல்ல ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் பெற வாழ்த்துகிறேன். வெற்றிகரமாக மக்களின் தலைவராக உருவான நீங்கள் உங்கள் கட்சிக்கு ஒரு வெற்றிகரமான வழிகாட்டியாக இருங்கள். ஆனால் உங்கள் கட்சி பல்வேறு பிரச்சினைகளில் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.

நோக்கம் நிறைவேறட்டும்

எடியூரப்பாவுக்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உழைப்பின் மூலம் உயர் பொறுப்பில் அமர்ந்துள்ள எடியூரப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கிறேன். 77 வயது நிரம்பிவிட்டாலும், 18 வயது இளைஞரை போல் மாநிலத்தை சுற்றி வந்து வளர்ச்சியை ஏற்படுத்த உழைக்கும் உங்களின் நோக்கம் நிறைவேறட்டும். நல்ல ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் பெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story