தேசிய அறிவியல் தினத்தையொட்டி நெல்லையில் மனித சங்கிலி திரளான மாணவர்கள் பங்கேற்பு


தேசிய அறிவியல் தினத்தையொட்டி நெல்லையில் மனித சங்கிலி திரளான மாணவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 29 Feb 2020 4:00 AM IST (Updated: 28 Feb 2020 9:11 PM IST)
t-max-icont-min-icon

தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும் வகையில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

நெல்லை, 

தேசிய அறிவியல் தினத்தையொட்டி நெல்லையில் மனித சங்கிலி நடந்தது. இதில் திரளான மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

மனித சங்கிலி 

தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும் வகையில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவ–மாணவிகளுக்கு இந்திய விஞ்ஞானிகள் குறித்த மாறுவேடப்போட்டி நடந்தது. இதில் அப்துல்கலாம் உள்ளிட்ட விஞ்ஞானிகளின் வேடம் அணிந்து மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து தேசிய அறிவியல் தின மனித சங்கிலி நடந்தது. இதை மாவட்ட அறிவியல் மைய அலுவலர் முத்துக்குமார் தொடங்கிவைத்தார். இதில் பாளையங்கோட்டை மகாராஜநகர் ஜெயேந்திரா பள்ளி, புஷ்பலதா பள்ளி உள்ளிட்ட பள்ளி மாணவ–மாணவிகள் கைகோர்த்து நின்றனர். அவர்களில் பலர் சர்.சி.வி.ராமன் உள்ளிட்ட விஞ்ஞானிகளின் முகமூடி அணிந்து இருந்தனர்.

மாணவர்களுக்கு பரிசு 

இதையடுத்து டாக்டர் சேதுராமலிங்கம் அறிவியல் தினம் குறித்து விளக்கி பேசினார். மேலும் மாணவ–மாணவிகளுக்கு கடந்த ஒரு வாரமாக பல்வேறு போட்டிகள் நடந்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அறிவியல் மைய அலுவலர் முத்துக்குமார் பரிசு வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அறிவியல் மைய கல்வி அலுவலர் மாரி லெனின் செய்திருந்தார்.

Next Story