திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா
திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்போரூர்,
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கி வரும் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று கோவில், கொடிமரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலையில் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து காலை 7 மணியளவில் மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தினமும் முருக பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வருகிறார்.
முக்கிய விழாவான தேரோட்டம் வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது. அன்று, அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி நான்கு மாடவீதிகளிலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 8-ந்தேதி வெள்ளித்தொட்டி திருவிழா மற்றும் தீர்த்தவாரி திருவிழா நடக்கிறது. 11-ந்தேதி திருக்கல்யாணம் நடை பெற உள்ளது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல், சிவாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story